குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பாடமை குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் கடும் வருத்தத்தை வெளியிட்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது பல தசாப்தங்களாக நபர்களை பலவந்தமாக கைது செய்து தடுத்து வைப்பதற்கு பயங்கரவாதத் தடை சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிலர் மாதங்களாகவும் வருடங்களாகவும் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை ரத்து செய்வது குறித்து பல தடவைகள் பேசிய போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு குறித்து அரசாங்கம் மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டு உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.