சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அரசின் விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சரகேப் நகரில் உள்ள சந்தைப் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் மட்டும் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரித்தானியாவைச் சேர்ந்த சிரிய போர் கண்காணிப்பகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி; பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராடிவரும் புரட்சிப் படையினருக்கெதிராக ரஸ்ய உள்ளிட்ட கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.