மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபவிருத்திக்கு, ; உதவி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், எதிர்காலத்திலும் கிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் இத்தகைய பல்நோக்கத் திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கிராமிய வறிய மக்களை வலுவூட்டும் நோக்குடன் விவசாயத் துறையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கிடைக்கும் உதவியை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றயை தினம் நடைபெற்ற போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சில திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், இலங்கை விவகாரங்களுக்கான அணித்தலைவருமான சாத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஜனாதிபதி அவர்களின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் கலாநிதி சரத் ராஜ பத்திரன, தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.