பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்தில உள்ள மாயோன் எரிமலை இன்னும் ஒரு சில நாட்களில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த எரிமலை கடந்த 2 வாரங்களாக சாம்பலையும் கரும் புகை மூட்டத்தையும் கக்கி வருகின்றமையினால் எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் பகுதி அபாயகரமான பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அங்கு வசிக்கும் சுமார் 84 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை திடீரென வெடித்த இந்த எரிமலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாம்பலையும் கரும் புகையையும் கக்கியுள்ளதாகவும் இதனால் ஒன்றரை கிலோ மீட்டர் வரை சாம்பல் படிந்ததாகவும் தெரிவிக்க்பபட்டள்ளது. இந்தநிலையில் மாயோன் எரிமலையை சுற்றியுள்ள நிலப்பரப்பில் மனிதர்கள் வசிக்கக்கூடாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. கடந்த 1814-ம் ஆண்டு இந்த மாயோன் எரிமலை வெடித்து சிதறியதில் 2200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.