இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கை விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் போட்களில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வுக்கும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த டி வில்லியர்ஸ் முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சுமார் 2 வார காலம் ஓய்வில் இருக்குமாறு அவருக்கு, மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.