குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படாது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கும் வரையில், மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமை பறிக்கப்படக்கூடிய சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதனை தாம் எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மஹிந்தவின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என டிலான் பெரேரா இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கையில் மஹிந்த் ராஜபக்ஸவின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.குடியுரிமையை ரத்து செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் மரபு எனவும் அதனை சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.