195
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மெர்சல்’. திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே வெற்றி பெற்றன.
இப் படம் குறித்த செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் 62ஆவது படமாக அமையும இந்த திரைப்படத்தில் விஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பூசை சமீபத்தில் நடைபெற்று வேகமாக படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது.
இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கி உள்ளனர் படக்குழுவினர். விஜய் 62 திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியீடு செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love