193
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதாகவும் இதில் அங்கிருந்த ராணுவ வீரர்கள் முகாம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பனியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டதாகவும் இந்த விபத்தில் 3 வீரர்கள் பலியானதாகவும், 1 வீரர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love