121
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்னவிற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜயந்த விக்ரமரட்ன உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேருக்கு எதிராக கல்கிஸ்ஸ நிதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய இவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Spread the love