172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஒருநாள் அணித் தலைவர் அன்ஜலோ மத்யூஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தசை பிடிப்பு உபாதை காரணமாக மத்யூஸ், பங்களாதேஸில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டித் தொடரின் இடைநடுவில் விலகிக் கொண்டிருந்தார்.
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் மெத்யூஸ் பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உபாதை காரணமாக பங்களாதேஸ் போட்டித் தொடரின் எந்தவொரு போட்டியிலும் மத்யூஸ் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love