குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், முன்னரைப் போன்றே தேசிய அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருகின்ற போதிலும், அவ்வாறான ஓர் நிலைமையை அவதானிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அநேக துறைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும், வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.