Home இலங்கை 2020 ஜனாதிபதி தேர்தல் களத்தில் கோத்தாபய, மைத்திரி ரணில்…

2020 ஜனாதிபதி தேர்தல் களத்தில் கோத்தாபய, மைத்திரி ரணில்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

2020ம் ஆண்டில் ரணிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்… எதிர்வரும் 2020ம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிங்கு நெருக்கமான தரப்பினர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாமும் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதியிடம், பிரதமர் அறிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் முத்தரப்பு போட்டியாகவே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோத்தாபய ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More