இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் போலி என்கவுன்ட்டரில கல்லூரி மாணவர் ஒருவரைக் கொன்ற வழக்கில் 7 காவல்துறையினருக்கான ஆயுள்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த வழக்கிலிருந்து 10 காவல்துறையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு 22 வயது மாணவரான ரன்பீர் சிங் என்ற மாணவன் போலி என்கவுன்ட்டரில் காவல்துறையினரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ரன்பீர் சிங் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு 2 பேருடன் சென்ற இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். எனினும் ரன்பீர் சிங், வேலை தேடும் நோக்கத்தோடுதான் சென்றதாகவும் அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் வருகையையொட்டி சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவல்துறையினரும் குறித்த பகுதிக்கு சென்ற போதுதான் இந்த போலி என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளபட்ட வழக்கில் குறித்த 17 காவல்துறையினரும் பதவிநீக்கம் செய்யப்பட்டதுடன் நீதிமன்றம் அவர்களுக்கு ஆயள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து குறித்த 17 காவல்துறையினரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் நீதிமன்றம் 7பேபின் ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததுள் 10 பேரை விடுவித்துள்ளது