தமிழ்நாட்டில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரும் மனுக்கள் மீது 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் தரம் குறைந்த நிலக்கரியை தரமானது எனத் தெரிவித்து இறக்குமதி செய்து 487 கோடி ரூபா மோசடி இடம்பெற்றிருந்தது
இதன் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கடலோர மின்சக்தி நிறுவனத்தின் நிர்வாகி அகமது ஏ.ஆர்.புகாரி, தேசிய மின்சக்தி கழகத்தின் அதிகாரிகள், உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தக கழகம், ஆரவல்லி மின்சக்தி கழகம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் தரப்பில் முன்னலையான சட்டத்தரணி இந்த முறைகேட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. எனவே, நீதிமன்ற கண்காணிப்பில் நாடு முழுவதும் உள்ள நிலக்கரி இறக்குமதி செய்த மின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள் மீது சிறப்பு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு, சி.பி.ஐ., மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவை 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் n4ம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்