Home இலங்கைதேர்தல் தொடர்பில் 60 முறைப்பாடுகள் – பெபரல்..

தேர்தல் தொடர்பில் 60 முறைப்பாடுகள் – பெபரல்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகள்..


இன்று காலை வரையில் தேர்தல் தொடர்பில் 60 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தாக்குதல்கள், வாகனங்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் சொத்து;களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

ரம்புக்கன பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாவலப்பிட்டியில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஒட்டுமொத்தமாக இம்முறை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More