Home இலங்கைவாக்குப் பெட்டிகளை அபகரிக்க முயற்சித்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் – காவல்துறை..

வாக்குப் பெட்டிகளை அபகரிக்க முயற்சித்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் – காவல்துறை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியார்..

வாக்குப் பெட்டிகளை அபகரிக்க முயற்சித்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் ரோந்துப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை புகைப்படம் எடுக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More