ஐ.நா.வின் அமைதிப்படை குழுவின் தலைவராக முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி ஐ.நா.வின் அமைதிப்படை குழுவின் தலைவராக பிரித்தானியாவினைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்ணலான கற்றி ஹிஸ்லோப் (Katie Hislop )சூடானுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படை குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
கலவரங்கள்; அதிக அளவில் நிகழும் நாடான சூடானின் தெற்கு பகுதிக்கு அனுப்பப்பட்ட ஐ.நா. அமைதிப்படை குழுவிலேயே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பல நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ள அந்த குழுவின் தலைவராக கற்றி ஹிஸ்லோப் பொறுப்பேற்றுள்ளார். ஐ.நா. அமைதிப்படையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும் .
உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு சரியான இடம் வழங்கப்படுவதில்லை எனவும் எனினும் தனக்கு ஒரு மரியாதையான இடம் கிடைத்துள்ளது எனவும் கற்றி ஹிஸ்லோப் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப்போன்ற பெண்கள் ராணுவத்தில் இணைவதற்கு முன்மாதிரியாக தான் இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.