162
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் தென்கொரியாவின் பியோங்சங் நகரில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள டேகு நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
பியோங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாதகியிருந்த நிலையில இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிதமான நிலநடுக்கம் என்பதால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பியோங்சங் நகரில் எவ்வித அதிர்வும் உணரப்படவில்லை என ஒலிம்பிக் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love