142
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர்வரை இதில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை hஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதால் மதியம் வரை தாக்குதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love