169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கான ஈரானிய தூதுவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அனைப்பதற்கு தீயணைப்புப் படையினரின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Spread the love