குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆபாச பட நடிகை ஒருவருக்கு பணம் வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் சட்டத்தரணி மைக்கல் கோச்சன் தெரிவித்துள்ளார். கோச்சன், ட்ராம்பின் சட்டத்தரணியாக மிக நீண்ட காலம் கடமையாற்றி வருகின்றார். ஆபாச படங்களில் நடிக்கும் நடிகை ஒருவருடன் ட்ராம்ப் தொடர்பு பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஸ்ட்ரோமி டானியல்ஸ் (Stormy-Daniels) என்றழைக்கப்படும் நடிக்கையையும் ட்ராம்பையும் தொடர்புபடுத்தியே செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.
2011ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் ஸ்ட்ரோமி, ட்ராம்ப்புடன் தொடர்பு பேணியதாக தெரிவத்திருந்த போதும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஸ்ட்ரோமி பற்றிய தகவல்கள் கசியக் கூடுமென, ஸ்ட்ரோமிக்கு பணம் வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ஆபாச பட நடிகையுடன் தொடர்பு பேணியதாக செய்யப்பட்ட பிரச்சாரத்தை தடுக்க, குறித்த நடிக்கைக்கு 130000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணத்தை தாமே வழங்கியதாக சட்டத்தரணி கோச்சேன் தெரிவித்துள்ளார். இந்தக் கொடுப்பனவு சட்ட ரீதியானது எனவும் தேர்தல் பிரச்சார நோக்கில் பணம் வழங்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.