120
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love