குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புளொரிடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமெரிக்க உளவுப் பிரிவிhன எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய இளைஞர் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியிருந்த நிகலோஸ் குருஸ் என்ற இந்த இளைஞர் மீது 17 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு யூடியுப்பில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தாம் ஓர் தொழில்வான்மையுடைய பாடசாலை துப்பாக்கிச் சூடுபவராக உருவாவேன் என இந்த இளைஞர் கூறியுள்ளார். இந்த மாணவனின் நடவடிக்கைகள் குறித்து பாடசாலையின் ஆசிரியர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.