176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தியதலாவை பேருந்து வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்து இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இந்த குழுவினை நியமித்துள்ளார்.
கைக்குண்டு ஒன்று வெடித்துச் சிதறியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தியதலாவையில் இடம்பெற்ற இந்த விபத்தில் படைவீரர்கள் உள்ளடங்களாக 19 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love