எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுப் பதவிகள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகினற்து
அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை நிதியமைச்சில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறப் போவதில்லை எனவும் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சுக்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாத நிழைலயில் ஜனாதிபதியினால் இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்படும் எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.