குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் புளொரிடாவில் இடம்பெற்ற பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர் உரிய நடவடி;ககைகளை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புளொரிடாவின் ப்ரோவார்ட் கவுன்ட்டி செரீப் ஸ்கொட் இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
புளொரிடா பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தப் பாடசாலையின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர், சம்பவம் இடம்பெற்ற போது கட்டடத்திற்கு வெளியே இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அதனை எதிர்த்து தாக்குதல் நடத்த பாதுகாப்பு உத்தியோகத்தர் முனைப்பு காட்டவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.