அமைச்சரவையில் மாற்றம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியிடப்பட்டு வந்த தகவல்களுக்கு அமைய தற்பொழுது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னனிலையில் ஜனாதிபதி செலயகத்தில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இதற்கு முன்னர் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக கடமையாற்றிய லக்ஸ்மன் கிரியல்ல, அரச முயற்சியான்மை மற்றும் மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சராக கடமையாற்றி வந்த ஹரீன் பெர்னாண்டோ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சராக ரவீந்திர சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றிய சாகல ரட்நாயக்க, இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் பெரேரா சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதேச விவகார அமைச்சராக ஜே.சீ அலவதுவல நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சராக ஹர்ஸ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.