பிரித்தானியாவின லெஸ்டர் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில், மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் நேற்று புதன்கிழமை மாலை இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் எனவும் காவற்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தின்போது காணப்பட்ட அடையாளங்களின் ஊகங்களின் அடிப்படையில் இவர்களை கைது செய்துள்ளமதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் தற்போதைக்கு இது குறித்து விபரங்கள் எதனையும் வெளியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டது அல்ல என்பதனை கூறமுடியும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லெஸ்டர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை கடை ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இணைப்பு 2 – பிரித்தானிய குண்டுவெடிப்பில் சிசிச்சை பலனின்றி நால்வர் உயிரிழப்பு:-
Feb 26, 2018 @ 08:12
பிரித்தானியாவின லெஸ்டர் பகுதியில் நேற்றிரவு கடை ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் காயமடைந்த ஆறு பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததால் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடை மற்றும் அதற்கு மேற்பகுதியில் உள்ள ஒரு வீடு கடுமையாக சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ள பிரித்தானிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் லெஸ்டரில் கடை ஒன்றில் குண்டு வெடிப்பு – 6 பேர் காயம்
Feb 26, 2018 @ 02:42
பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக காணப்படுவதற்கான அறிகுறியும் இல்லை என காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குhயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் இருவரின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதயில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குறித்த பகுதிக்கு செல்வதனை தவிர்க்குமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை போன்ற பெரிய சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு குழுவினர் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது