149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (26.02.2018) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.
Spread the love