பிணை முறி மோசடி சூத்திரதாரி சட்டம் ஒழுங்கு அமைசர் :-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டை அதள பாதாளத்திற்கு இட்டுச் செல்வதனை நிறுத்திவிட்டு இருவரும் தங்களது பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு இடமில்லை எனக் கூறும் ஜனாதிபதி, ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை பாதுகாத்து வருவதாகவும், தெற்காசியாவில் இடம்பெற்ற மிகப் பாரிய நிதி மோசடி மத்திய வங்கி பிணை முறி மோசடி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாகல ரட்நாயக்கவிடம் இளைஞர் விவகார அமைச்சினை ஒப்படைப்பதானது நரியிடம் கோழிகளை ஒப்படைப்பதற்கு நிகரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.