Home இந்தியாகோராக்பூர் சிறைச்சாலையில் 23 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு

கோராக்பூர் சிறைச்சாலையில் 23 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு

by admin


இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர் சிறைச்சாலையில் உள்ள மேற்கொள்ளப்பட்ட கைதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த சிறைச்சாலையில் 1800 கைதிகள் உள்ள நிலையில் வழமையாக மேற்கொள்ளப்படும் வருடாந்த பரிசோதனைகளின் போது இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இதுவரை 1400 கைதிகளுக்கு பரிசோதனை முடிந்துள்ளது எனவும் 400 கைதிகளுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எயிட்ஸ் பாதிப்புக்குள்ளான 23 பேரில் ஒருவர் பெண் எனவும் இவ்வாறு இவர்களுக்கு எயிட்ஸ் நோய் பரவியது எனத் தெரியவில்லை எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More