214
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் தீவகம் மண்டைதீவுக் கடலில் சேர்க்கப்பட்டன. பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக 3கடலாமைகள் உயிருடன் உள்ளன என்று யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டன.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், அவற்றை மீட்டு, தீவகம் மண்டைதீவுக் கடலில் கடலில் சேர்ப்பித்தனர். இலங்கையில் கடலாமையை கொல்லுதல் மற்றும் அவற்றை உணவுக்காக விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love