குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதிக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்பின் வரிக் கொள்கையை சர்வதேச நாணய நிதியமும் எதிர்த்துள்ளது.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் உருக்கு வகைகளுக்கு 25 வீதமும், அலுமினிய வகைகளுக்கு 10 வீதமும் வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது அமெரிக்காவையும் ஏனைய நாடுகளையும் பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு உருக்கு மற்றும் அலுமினியம் வழங்கும் பிரதான நாடுகளாக கனடாவும் சில ஐரோப்பிய நாடுகளும் திகழ்கின்றன. ஜனாதிபதி ட்ராம்ப் இந்த கொள்கையை அமுல்படுத்தினால் மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என சில நேச நாடுகள் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளன.