பாடசாலைகளைச் சுற்றியுள்ள 100 மீற்றர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 7ஆம் திகதி வெளியிடப்பவுள்ளது.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குறித்த தினத்தில் வர்ததமானியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது பாடசாலைகளை சுற்றியுள்ள 500 மீற்றர் எல்லைப் பகுதிக்குள் சிகரெட் விற்பனையை தடுப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதன் எல்லையின் அளவு 100 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிகரெட் விற்பனை செய்யும் சட்டத்தை 21 வயது வரை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.