228
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளநிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தில் ஆந்திராவுக்கென எந்த அறிவிப்புகளும் இல்லை எனத் தெரிவித்தே அவர்கள் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக இன்று நாடாளுமன்றில் கடுமையான தொனியில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love