125
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற அடிப்படையில் அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அண்மையில் அம்பாறையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்துமாறு பிரதமர் கிழக்கு மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Spread the love