Home சினிமாபிறந்த நாளில் விஜய் படக்குழு வரலட்சுமிக்குக் கொடுத்த பரிசு!

பிறந்த நாளில் விஜய் படக்குழு வரலட்சுமிக்குக் கொடுத்த பரிசு!

by admin

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 62’ திரைப்படத்தில்  விஜய் நடிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட விஜயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றது.

அத்துடன் சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரச பாடநாலை ஒன்றிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இதேவேளை இப் படத்தில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் இப்படக்குழுவில் இணைந்திருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி படுத்தி இருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளதாம்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More