Home சினிமா சூர்யாவின் 36ஆவது படத்தின் தலைப்பு அறிவிப்பு!

சூர்யாவின் 36ஆவது படத்தின் தலைப்பு அறிவிப்பு!

by admin


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது 36ஆவது திரைப்படமாகும். இந்த நிலையில் குறித்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதல் சுவரொட்டியிலும் வெளியிட்டப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய  `தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் இப் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடை பற்று படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு ‘NGK’ (‘என்ஜிகே’) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் முதல் சுவரொட்டியும் (First Look) வெளியிடப்பட்டுள்ளது.

தனித்துவமாக அமையப்பெற்றுள்ள இந்த சுவரோட்டி சூர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அத்துடன் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More