அவுஸ்ரேலியாவின் நவுரூ தீவில் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
29 பேர் கொண்ட இந்தக் குழுவில் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கங்களுடன் ரோஹிங்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரு குடும்பங்களும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனி நபர்களும் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நவுரூ தீவில் இருந்து நேற்றையதினம் இவர்கள் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டள்ளதாகவும் இதில் எட்டுக் குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 புகலிடக் கோரிக்கையாளர்களை தமது நாட்டில் குடியேற்ற அமெரிக்கா இணங்கியிருந்ததற்கமைய, ஐந்தாவது தொகுதி அகதிகள் தற்போது அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.