குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார். பயிற்சி நெறி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரிகேடியர் பிரியங்க இவ்வாறு சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.
பிரியங்க, பிரித்தானியாவில் கடமையாற்றிய காலத்தில் இந்தப் பயிற்சி நெறிக்காக பரிந்துரை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் நடைபெறும் பயிற்சி நெறியில் பங்கேற்பதற்கு பிரிகேடியர் பிரியங்க விருப்பம் தெரிவித்திருந்தார் என இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுத்து கொலை செய்வதாக சைகையில் காண்பிடித்தார் என பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது