Home இலங்கைதிகன சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் கிடையாது:-

திகன சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் கிடையாது:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.


திகன சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாiமையே இந்த தாக்குதல் சம்பவம் மூலம் வெளிப்பட்டு நிற்பதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்குள் பல்வேறு பிளவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றினால் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தை அடக்குவதாக வெளிக்காட்டிக்கொள்ள சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More