Home உலகம்அதிக வயதில் சதத்தை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரராக கிறிஸ் கெய்ல்

அதிக வயதில் சதத்தை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரராக கிறிஸ் கெய்ல்

by admin


மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான கிறிஸ் கெய்ல், 3 வருடங்களுக்குப் பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளுடனான போட்டியின் போது அவர் பெற்றுள்ள இந்த சதமானது அவரது 23-வது சதமாகும். இதன்மூலம் அதிக சதங்கள் பெற்றவர்களின் பட்டியலில் கெய்ல் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் இதுவரை அந்த இடத்தில் 22 சதங்களுடன் இருந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சவுரவ் கங்குலி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக வயதில் சதத்தை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் என்ற சிறப்பையும் 38 வயதான கெய்ல் பெற்றுள்ளார். இதன்மூலம்  தேஸ்மான்ட் ஹெய்னின்  பெருமையை கெய்ல்  கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More