மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூகிக்கு எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற உயரிய விருதினை வழங்கியிருந்தது.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அந்த விருதினை ரத்து செய்வதாக அருங்காட்சியகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலையின்போது, ஆங் சான் சூகி கருத்து ஏதும் தெரிவிக்காமல் மௌனம் காத்தமைக்காகவே விருதினை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூகியின் தேசிய லீக் ஜனநாயகக் கட்சி, இந்த இனப்படுகொலையைக் கண்டிக்கத் தவறியமை மற்றும் தடுக்கத் தவறியதோடு ஐ.நா. விசாரணைக் குழுவினருக்கும் ஒத்துழைப்பும் அளிக்காமை போன்ற காரணங்களுக்காக விருதை ரத்து செய்வதாக அருங்காட்சியம் தெரிவித்துள்ளது
மேலும் , ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பதிவு செய்யவந்த பத்திரிகையாளர்கள் மீதும் அடக்குமுறையை பிரயோகித்ததாகவும் ஆங் சான் சூகி மீது அந்த அருங்காட்சியகம் குற்றஞ்சாட்டியுள்ளது.