Home இலங்கைகண்டி சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டியில் கலவரத்தை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களை வழிநடத்தியதாக அமித் வீரசிங்க மற்றும் சுரேந்திர சுரவீர ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து வீடியோ ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More