ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மொகமத் ஷஜாத்துக்கு இருபோட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியின் போது சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய மொகமத் ஷஜாத் தான் ஆட்டமிழந்ததனை அடுத்து ஆடுகளத்திற்கு பக்கத்திலிருந்த மற்றொரு ஆடுகளத்தில் துடுப்பாட்ட மட்டையால் ஓங்கி அடித்தமையினால் பிட்சில் பள்ளம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவருக்கு 2 லீக் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 24 மாத காலத்தில் 2வது தவறான நடத்தை என்பதால் முழு சம்பளத்தையும் இழந்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே 2 போட்டிகளையும் இழந்த நிலையில் ஷஜாத்துக்கு விதிக்கப்பட்ட தடை அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.