குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னில் மகளிர் தினத்தில் பாரியளவில் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகின் ஏனைய நாடுகளில் மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்பெய்னில், பெண்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்தி இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்பெய்னின் முக்கியமான பெண் அரசியல்வாதிகளும் பத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. நாம் நிறுத்திக் கொண்டால் உலகம் நின்றுவிடும் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.புகையிரத , விமான போக்குவரத்து உள்ளிட்ட உள்நாட்டு போக்குவரத்து சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஸ்பெய்னின் 200 இடங்களில் மாலையில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது