கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி பாதுகாப்பான பிரசவத்திற்கு உதவி புரிந்த இலங்கை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 08.03.2018 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சுழிபுரம் பகுதியைச் சேரந்த கர்ப்பிணித் தாயொருவர் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளை பயணித்த முச்சக்கர வண்டி இயந்திரக்கோளாறு ஏற்பட்டு இடைநடுவில் நின்றிருந்தது. இரவு வேளையென்பதால் பயணத்தை தொடரமுடியாது பரிதவித்து நின்றவர்களுக்கு அப்போது வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமையில் இருந்த செனிவிரட்ண என்ற காவலர் உதவியிருந்தார்.
தற்போது பொலநறுவ பகுதியில் கடமையாற்றிவரும் குறித்த காவலரின் மனிதநேய செயற்பாட்டை மதிப்பளிக்கும் வகையில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களது அறிவுறுத்தலின் பிரகாரம் அக்காவலர் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.