குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேசத்தை அச்சுறுத்தும் வகையில் அமையக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி, அந்நாட்டின் முன்னணி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் உலகின் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தல் கிடையாது என்பதனை உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜப்பானுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது