குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூல் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், முகநூல், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கண்டி சம்பவம் இடம்பெற்ற வரையில் சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தொடர்ந்தும் தடை விதிப்பதற்கான அவசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.