ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகளில், புயல் எச்சரிக்கை தகவல் கிடைத்ததனை அடுத்து 178 படகுகள் லட்சத்தீவு, கோவா பகுதிகளுக்கு கரை திரும்பியுள்ள நிலையில் ஏனையவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று மாலை தீவுப் பகுதிக்கு நகர்ந்துள்ள நிலையில், புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தது.
துறைமுகங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுவதுடன் கடற்கரை பகுதியில் உள்ள ஆலயங்களிலும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்கச் சென்றதில் 178 படகுகள் கரை திரும்பியுள்ளனஏனைய 24 விசைப்படகுகளில் 300 மீனவர்கள் கரைதிரும்பாமல் உள்ளனர். இதனைத் தொடர்ந்து கொச்சியில் இருந்து இந்திய கடற்படையினர் அதிநவீன படகுகளில் 400 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது